மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு இலங்கைத் திருச்சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக திருச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கைத் திருச்சபையின் கொழும்பு ஆயர் துஷாந்த ரொட்ரிகோ மற்றும் குருணாகல் ஆயரும் தலைமை ஆயருமான நிஷாந்த பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.
