Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் எல்நினோ விழிப்புணர்வு கூட்டம்

ஆடி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றம், மழை வீழ்ச்சி முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சி நிலை தீவிரமடையும் சாத்தியம் காணப்படுகிறது.

இதனால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதால், விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் தங்களது செய்கை நடவடிக்கைகளை திட்டமிடுவது அவசியமாகியுள்ளது.

இதனை முன்னிட்டு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு ஏற்பாட்டில், புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோவினால் ஏற்படக்கூடிய வறட்சி தாக்கங்கள், விவசாயிகள் எதிர்நோக்கக்கூடிய சவால்கள், அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேலும் விவசாயிகள் தாங்களே மேற்கொள்ள வேண்டிய தழுவல் மற்றும் தயார்நிலை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், விவசாயிகள் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களது விவசாய முறைகளை மாற்றியமைத்து, பாதிப்புகளைக் குறைத்து, நிலையான உற்பத்தி மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியும்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் வயது குறித்து அமைச்சர் நளிந்த விளக்கம்

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சந்தேகநபர் வழங்கிய தகவலில் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பழுகாமம் பாலம் புனர்நிர்மான பணி ஆரம்பிப்பு

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: பழிவாங்கல் நடப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube