Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல பகுதிகளில் மழை; பலத்த காற்றுக்கு எச்சரிக்கை!

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். கடல் அலைகள் 2.5 முதல் 3.0 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்களும் கடற்பயணிகளும் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கரடியனாறு பகுதியில் யானை தாக்கி 76 வயது முதியவர் பலி!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்

புரட்டாதி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்க எதிர்பார்ப்பு

புரட்டாதி 25, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் “ஜனநாயகன்”

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube