Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைதொழில்நுட்பம்

மோட்டார் வாகன விபத்துக்களை துல்லியமாக கண்டறிய நவீன கெமரா

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கெமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கெமராக்கள் மூலம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு படம் பிடிக்கப்படுவார்கள்.

வழக்கமான கெமராக்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வீதி விதிமீறல்கள் உடனடியாகப் படம்பிடிக்கப்பட்டு சான்றுகளுடன் சேமிக்கப்படுவதால், தவறிழைக்கும் சாரதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.

இத்திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 9 பிரதான சந்திப்புகள் மற்றும் வீதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் அதிகளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வீதி விபத்துக்களைக் கட்டுபடுத்தும் நோக்கில், வாகனங்களின் வேகத்தை கண்டறிவதற்காக புதிதாக 50 வேகமானி கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் போக்குவரத்துப் பொலிஸாரால் 45 வேகமானி கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 கருவிகள் சேர்க்கப்படுகின்றன. 45 இத்தகைய கருவிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த கருவிகளில் ஒன்றின் விலை சுமார் 33 இலட்சம் ரூபாவாகும் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய வழிகாட்டல்கள், பரிந்துரைகள் வெளியீடு – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!

ஆடி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கிரேக்கத்தில் காட்டுத் தீ – 8000 பேர் வெளியேற்றம்

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

ஆடி 7, 2026
இலங்கைஎங்கள் ஊர்

6 வயது சிறுமி உலக சாதனை!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube