Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

மகாவலி ஆற்றுப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மகாவலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அடுத்த 48 மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு நிலை வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (03) பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, எதிர்வரும் புதன்கிழமை (05) பிற்பகல் 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை, தொடரும் மழைக்கான சாத்தியம் மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் வாய்ப்பு காரணமாக வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரளை, பஸ்பாகே கோரளை, கங்கவட கோரளை, ஹரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாவலப்பிட்டிப் பகுதியில் 210 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு

புரட்டாதி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வலி.வடக்கில் காணி விடுவிப்பு போராட்டம் – சுமந்திரன், சாணக்கியன் பங்கேற்பு

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த ஆண்டு டெங்கு நோயாளர்கள் 82 ஆயிரத்தை கடந்தனர்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 367 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு !

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube