Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேக பாதை!

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாவதைக் குறைக்கும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்யேக பாதை களுவாஞ்சிக்குடியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய வீதிப் பாதுகாப்பு பேரவை மற்றும் ஹெய்லிஸ் அத்வாண்டிஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த “100 for 100” தேசிய நிறுவன மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்படி ஏனைய வாகனப் போக்குவரத்திலிருந்து இந்தப் பாதை தனியாகப் பிரிக்கப்படும்.

மலேசியா போன்ற நாடுகளில் மோட்டார் சைக்கிள்கள் பிரத்யேக வீதிகள் மூலம் விபத்துகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளமையை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் பயன்பாட்டாளர்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் களுவாஞ்சிக்குடி முன்னோடித் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், “100 for 100” திட்டத்தின் மூலம் 100 தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு நிறுவனமும் 100 மோட்டார் சைக்கிள்களை செலுத்துபவர்களுக்கு வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கவுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெர்பெச்சுவல் டிரஷரீஸ் இடைநீக்கம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு

ஆடி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

துருக்கியிலிருந்து லிபியா நோக்கி பயணித்த தனியார் ஜெட் விமானம் விபத்து

புரட்டாதி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 மீற்றர் வரை உயர்ந்த கடல் படுகை!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube