Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலையும் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். அதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மேலும், வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 20 வருடமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் மீனவ கிராமத்து மக்கள் – ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து – சாரதி படுகாயம்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube