உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (05) அமெரிக்க டொலர் 80 மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.20 டொலராகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.40 டொலராகவும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் இணக்கப்பாட்டை எட்ட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
