Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

#நாவலப்பிட்டி #கல்லாறுதோட்டம் #மக்கள்போராட்டம் #மக்கள்பிரச்சினை #இலங்கை #தமிழ்செய்திகள் #Nawalapitiya #EstateWorkers #Protest #SriLankaNews

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாவலப்பிட்டி, பஸ்பாகே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இம்புல்பிட்டி தோட்டம், கல்லாறு பகுதியைச் சேர்ந்த பத்து குடும்பங்கள் தங்களது குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு அரச அதிகாரிகளிடம் எழுத்து மூலமாகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளனர்.

​எனினும், சில சந்தர்ப்பங்களில் பதில் கடிதங்கள் கிடைத்த போதிலும், அவர்களின் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரமான தீர்வு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதற்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​அண்மையில் பெய்த கனமழையால் குடியிருப்பு பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

​இந்த நிலையில், 2026 ஆகஸ்ட் 5 ஆம் திகதி பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலாளரை நேரில் சந்தித்துத் தங்களது அவலநிலையை எடுத்துரைக்கச் சென்றபோது, தங்களை அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

​இதனால் மனவேதனை அடைந்த மக்கள், தங்களது கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்கக் கோரி, நாவலப்பிட்டிய பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை – போலந்து இடையில் புதிய ஒப்பந்தம்!

ஆவணி 18, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் சந்திப்பு – 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் என்னை கைதுசெய்யலாம் – நாமல்

புரட்டாதி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube