Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெட்ரோ பஸ் சேவை நாடு முழுவதும் விரிவாக்கம்!

ஆவணி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்தி, 2029ஆம் ஆண்டிற்குள் மெட்ரோ பஸ்களின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 104 புதிய மெட்ரோ பஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அவை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சேவையில் உள்ள 10 பஸ்கள் மற்றும் ஜப்பானிடமிருந்து கிடைக்கப்பெற்ற 7 பஸ்களுடன் இணைந்து, மொத்தம் 121 பஸ்களைக் கொண்டு “Colombo Metro Urban Luxury” சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, இத்திட்டம் கொழும்பில் மட்டும் இல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதன் அடிப்படையில், கொழும்புக்கு வெளியே யாழ்ப்பாணம் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதல் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தி, வீதி நிர்மாணம் உள்ளிட்ட பணிகளை காலதாமதமின்றி நிறைவு செய்யுமாறும் அரச அதிகாரிகளிடம் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டிசம்பர் மாத இறுதிக்குள் CT scanner இயந்திரம் வழங்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

புரட்டாதி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியை விட மிகப்பெரிய மனிதப் புதைகுழி வட்டுவாகால் விகாரைக்குக் கீழே உள்ளது – துரைராசா ரவிகரன்

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube