Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

டேனியல் கினஹான் நாடுகடத்தப்பட்டு விளக்கமறியலில்!

ஆவணி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலகின் முக்கிய தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராகவும், சர்வதேசக் குற்றக்குழுவின் தலைவராகவும் கருதப்படும் டேனியல் கினஹான் துபாயிலிருந்து அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2015 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 6 வரையான காலப்பகுதியில் குற்றவியல் அமைப்பொன்றின் நடவடிக்கைகளை வழிநடத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

49 வயதான கினஹானை ஏற்றிச் சென்ற அயர்லாந்து அரசாங்கத்துக்குச் சொந்தமான வானூர்தி டப்ளினை சென்றடைந்ததும் அவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற 13 நிமிட விசாரணையைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல தொன் எடையிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சர்வதேச ரீதியில் கடத்தியமை, 12க்கும் மேற்பட்ட பாதாள உலகக் கொலைகளுடன் தொடர்புடையமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கினஹான் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க நிதித் திணைக்களம் டேனியல் கினஹான் தலைமையிலான குற்றக்குழுவை உலகின் மிகவும் ஆபத்தான குற்றவியல் அமைப்புகளில் ஒன்றாக வர்ணித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு வீட்டு கடன் திட்டம்!

புரட்டாதி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; கண்ணீர்ப்புகை பிரயோகம்!

ஆவணி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

விண்வெளி வீரர்களுக்கு நாசா அவசர உத்தரவு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர் உரிமைகள் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube