2026.08.09 அன்று, கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கையில், 135 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 1,600 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
கோடா 8 பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தெலவல பகுதியைச் சேர்ந்த 56 மற்றும் 22 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
