Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆவணி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 224 ஆக உயர்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், நேற்று முன்தினம், 7.4 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், நாட்டின் ஏழ்மையான சோகோ மாகாணமும், புகழ்பெற்ற காபி உற்பத்தி மண்டலமான ரிசாரால்டா மாகாணமும் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. நாடு முழுதும் 1,577 குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன.

இதில் 37 கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாயின. மேலும், 18 மருத்துவமனைகள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன.

கலி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல்கலை மருத்துவமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், நோயாளிகள் உள்ளே சிக்கிக் கொண்டனர். மருத்துவமனையின், 30 சதவீத கட்டமைப்பு சேதமடைந்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 224 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 570-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரிசாரால்டாவின் பெரேரா நகரில் மட்டும், 60 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிசார், தீயணைப்பு வீரர்கள்,
இராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொலம்பியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.

இதற்கிடையே, நாடு முழுதும், 3,000க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மலைநாட்டில் அடைமழை – கண்டி விக்டோரியா நீர்த்தேக்கம் வற்றிய நிலையில் காட்சி!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கான போட்டிப்பரீட்சை ஜூன் 7

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

விசித்திர அறிகுறிகளுடன் செத்து மடியும் கருங்குருவிகள்

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பயணத்தடை நீக்கம்!

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube