Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருவிட்ட சிறை மோதல்: இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

ஆவணி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மையின்போது உயிரிழந்த இரு கைதிகளின் மரணத்திற்கும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட கடுமையான காயங்களே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ரத்தினபுரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில், ஒரு கைதி தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், மற்றைய கைதி மார்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த அமைதியின்மையில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு மேலதிகமாக காவல்துறை விசேட அதிரடிப்படை, கலகத் தடுப்புப் பிரிவு மற்றும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கு முன்னரும் நீர்கொழும்பு, மகர, புதிய மெகசின் மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளில் அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் குழந்தைகள், சிறுவர்களின் என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி – குண்டசாலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஈழ தமிழர்களை கைவிட்டது போல மலையகமக்களையும் கைவிட்டுவிடக்கூடாது – மனோகணேசன்

ஆவணி 22, 2026
இலங்கை

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சாதனை!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube