Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமையளிக்கப்படவில்லை – மஹிந்த சமரசிங்க

ஆவணி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தூதுவர் பதவியை வகித்துக் கொண்டு நான் அரசியல் செய்யவில்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்கு அறிவார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமையளிக்கப்படவில்லை. அரசியலில் அதிருப்தியடைந்த நிலையில் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தேன். நல்லவேளை தூதுவராக சென்றது. இல்லையேல் எனது வீடும் தீக்கிரையாக்கப்பட்டிருக்குமென அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பின்வரிசை உறுப்பினராகவே இருந்தேன். உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதனால் அரசியல் அதிருப்தியடைந்து சுய விருப்பத்தின் அடிப்படையில் பதவி விலகினேன். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டேன்.

தூதுவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நான் அரசியல் செய்யவில்லை. இதனை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்கு அறிவார். தூதுவராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து பதவி விலகும்வரை இலங்கைக்கு பயன்பெறும் வகையில் செயற்பட்டேன். அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு பல ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுத்தேன்.

தூதுவராக நியமிக்கப்பட்டதையிட்டு தற்போது மகிழ்ச்சியடைகிறேன். அரசியல்வாதியாக இருந்து நாட்டுக்கு முடிந்த சேவையாற்றியுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – நுவரெலியா வீதி ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டது!

ஆடி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நுவரெலியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் சட்டவிரோத மதுபான கடத்தல்

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புதிய வேலைத்திட்டம்!

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube