Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் விரைவில் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள்

ஆவணி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக்குக் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்த அவர், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் உட்பட சுமார் 100 பேரைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சர்வதேச ஆதரவு தங்களது கிடைத்துள்ளதாகக் கூறிய பொலிஸ் மா அதிபர், அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கனடா தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அதேவேளை, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குடும்ப மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய வங்கியின் பினைமுறி மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் மகளிடம் ஆபாசமாக பேசிய தந்தை கைது!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதி சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கியுள்ளது!

வைகாசி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube