Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆசனப்பட்டி அணியும் வசதி இல்லாத பழைய வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

அதற்கமைய, செப்டம்பர் 19ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிந்திருப்பது அவசியமாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறை மிகக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

இதேவேளை,அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளில் ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் பயணிகளிடம் இருந்தும் தண்டப்பணத்தை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசனப்பட்டி பொருத்தப்படாத வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக்காலம் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் முடிவடைவதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக அமுல்படுத்தப்படுகிறது.

சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணியாததால் ஏற்படும் வீதி விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அமுலாக்க நடவடிக்கை முன்னெடுப்பு: தென்கொரிய மாநாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

70 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் தம்பதியர் கைது

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் –அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸ்பா நிலையங்கள் மீது பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கை!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube