Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை இளைஞர்கள் திருமணம் செய்யாமைக்கான காரணம் இதுதான்!

ஆவணி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையில் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வதையும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதையும் தாமதிப்பதற்கு பொருளாதார நிலைமை உள்ளிட்ட பல காரணிகள் தாக்கம் செலுத்துவதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

அதிகரித்த வாழ்க்கைச் செலவு, வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமம், போதிய வருமானம் இல்லாமை மற்றும் வேலைவாய்ப்பில் காணப்படும் நிலையற்ற தன்மை ஆகியவை இளைஞர்களின் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு தொடர்பான முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் திருமணம் அல்லது குழந்தைப்பேற்றை விரும்பவில்லை என்பதல்ல. மாறாக, பொருளாதார ரீதியாக ஓரளவு ஸ்திரமான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நிலையான வேலைவாய்ப்பு, போதுமான வருமானம், மலிவு விலையில் வீடு மற்றும் குழந்தைப் பராமரிப்பு வசதிகள் கிடைப்பது முக்கியமானதாக இளைஞர்கள் கருதுகின்றனர்.

இதனால், இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மலிவு விலையில் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அதிகரித்தல், குழந்தைப் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் குடும்பத்துக்கு ஏற்ற பணிச்சூழலை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி என்புகூடுகளை அறிவியல் ரீதியாக அடையாளம் காண அறிவுறுத்தல்

புரட்டாதி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தலவாக்கலை, வட்டகொட புகையிரத நிலையங்களில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதல்கள்: அரசுக்கு நாமல் கண்டனம்!

ஆவணி 2, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

மோடியின் செல்வாக்கு குறையவில்லை – புதிய ஆய்வின் முடிவு

ஆவணி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube