ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிப்பானை இம்ரான்’ என்பவரின் நெருங்கிய சகா எனச் சந்தேகிக்கப்படும் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன என்ற ‘வனாத்தே சது’ ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஃஸ் அல் கைமா பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய் பாதுகாப்புப் படையினரால் இச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
