Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

தொலைபேசிக்காக மலையிலிருந்து குதித்த இளைஞன் – பெற்றோரும் தற்கொலை

ஆவணி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில், தற்கொலை செய்துகொள்ள முயன்ற தனது 19 வயது மகனை பெற்றோர் தடுக்க முயன்றபோது, ​​ தந்தையும் மகனும் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதுடன் தாயும் மலையிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாலுஜ் எம்.ஐ.டி.சி-யின் கீழ் உள்ள திஸ்கான் பகுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

காவல்துறையினரின் விசாரணைகளில், குணால் முரளிதர் சந்த்குடே (19) என்ற இளைஞன் பெற்றோரிடத்தில், கைத்தொலைபேசி வாங்கித்தருமாறு ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் காலை 10 மணியளவில் மலை மீது ஏறியுள்ளார்.

சத்ரபதி சம்பாஜிநகரின் ஜல்தா ஃபாட்டா பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களான முரளிதர் சந்த்குடே (48) மற்றும் சங்கீதா சந்த்குடே ஆகியோர் அவரைத் தடுக்க அங்கு வந்துள்ளனர்.

குறித்த இளைஞனை காவல்துறையினரும் கிராம மக்களும் சமாதானப்படுத்த முயற்சித்த நிலையில், தீயணைப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டு, மலையின் கீழே வலை விரிக்க முயற்சித்த போதும் குறித்த இளைஞன் மலையில் வேறு வேறு பகுதிகளுக்கு தனது திசையை மாற்றிக்கொண்டுள்ளார்.

இதன் போது தந்தை அவனைத் தேற்றி சமாதானப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்த போதே , இளைஞன் குதித்துள்ளார். அவனைத் தொடர்ந்து சென்ற தந்தையும் கீழே விழுந்து உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த தாயும் மலையிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சடலங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நீதி கோரி கித்துள் சந்தியில் போராட்டம்!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கண்டனப் போராட்டம்!

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube