மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நுகேகொட, நாவல வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நந்தா மாலினியின் பூதவுடல் தொடர்பான இறுதிக்கிரியைகள் பொரளைப் பொது மயானத்தில் இன்று (22) இடம்பெறவுள்ளன.
