Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 வயது குழந்தையொன்று கால்வாயில் விழுந்து உயிரிழப்பு

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அநுராதபுரம் கல்னேவ பகுதியில் கால்வாயில் விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.

கல்னேவ – கலேவெல வீதியில் உள்ள கால்வாயில் நேற்று (23) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் கல்னேவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கல்னேவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

நேற்று பிற்பகலில், வீட்டில் இருந்த குழந்தையை காணவில்லை என அக்குழந்தையின் தந்தை அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களும் கலேவெல பொலிஸாரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது குழந்தையின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயின் பாலத்தில் குழந்தை சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதுடன் கல்னேவ வைத்தியசாலைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் அக்குழந்தை உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது.

குழந்தையின் சடலம் கல்னேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கைதி கொலை வழக்கின் விசாரணை இன்று!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் VTOL விமான உற்பத்தி!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜெர்மன் நாட்டின் பிரதி தூதுவர் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருடன் சந்திப்பு!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தோணி கவிழ்ந்து மூன்று மாணவர்கள் பலி!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube