Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆவணி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசு தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், மனிதாபிமான மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கும், தனது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒற்றுமைப் பிணைப்புகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்த இக்கட்டான நேரத்தில் நேபாள மக்களுடன் இலங்கை உறுதியாக நிற்கிறது என்று வலியுறுத்தினார். இந்த நிதியுதவியானது, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேற்று காலை (27 ) வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் நேபாள வெளிநாட்டு அமைச்சர் ஷிசிர் கானலுடன் தொலைபேசியில் உரையாடியபோது, நேபாளத்திற்கு இலங்கையின் இரங்கலையும், உறுதியான ஆதரவையும், வழங்கும் என வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கம் நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி வருவதுடன், நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்கு இலங்கை பங்களிக்கக்கூடிய பொருத்தமான வழிகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பொலிஸாரிடம் யோசனைகள் கோரல்!

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக விபத்து – ஐவர் வைத்தியசாலையில்

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube