Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைக்கு பதில் வீட்டுக்காவல்! சட்ட மறுசீரமைப்புகள் முன்னெடுப்பு

#வீட்டுக்காவல் #சட்டமறுசீரமைப்பு #சட்டதிருத்தம் #நீதித்துறை #சிறைத்தண்டனை #சட்டசீர்திருத்தம் #BreakingNews #NewsUpdate

செப்டம்பர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்காகப் பல சட்ட மறுசீரமைப்புகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு, தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

“நீதித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்ட மறுசீரமைப்பும் இடம்பெறுகிறது. சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைத்தல், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்துதல், பிணை பெற முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புகளைச் செய்தல், சிறைச்சாலைகளுக்கு வெளியே இவ்வாறானவர்களை வீடுகளில் தடுத்து வைத்து தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற பல மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இந்தச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்வானிலை

எல்நினோவினால் 4,50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அபாயம்

செப்டம்பர் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

அக்டோபர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல பகுதிகளுக்கு 100 மிமீ அதிக பலத்த மழை

ஆகஸ்ட் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

 நிலக்கரி பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை ஆரம்பம்!

ஜூன் 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube