இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீனக் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான குடிவரவுக் கட்டுப்பாட்டு ஒத்துழைப்புக்கள் தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீனக் குடியரசின் தேசிய ; குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான குடிவரவுக் கட்டுப்பாட்டு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இருதரப்பினர்களுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் விஜயங்களுக்கான வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளல்.
