Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு இணையதளம் திறப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இஸ்ரேல் மற்றும் இலங்கைக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலின் வணிகம் மற்றும் சேவைத் துறைக்காக பணியாளர்களைப் அனுப்புவதற்கான இணையதளம் இன்று (03) காலை திறக்கப்பட்டுள்ளது.

http://www.slbfe.lk என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று 10,000 விண்ணப்பதாரர்கள் நிகழ்நிலை முறையில் விண்ணப்பிக்க முடியும். இதில் 8,000 ஆண் விண்ணப்பதாரர்களுக்கும், 2,000 பெண் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

இஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகார சபையான பீபா அமைப்பின் அறிவிப்புக்கு அமைய, இந்த இணைய முகப்பு திறக்கப்படுவதோடு, குறிப்பிடப்பட்ட 10,000 விண்ணப்பதாரர்கள் பூர்த்தியானதும் இணையத்தளம் தானாகவே மூடப்படும் எனவும் பணியகம் தெரிவித்துள்ளது.

25 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட, ஆங்கிலத்தில் பேசக்கூடிய திறனுடைய மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை கொண்ட ஆண்களும் பெண்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

தோட்ட அலங்காரம் , மீள்சுழற்சி சேகரிப்பு சேவைகள், பொருட்கள் பொதியிடல், உணவு உற்பத்தி சார்ந்த பணிகள், பொருட்கள் கையாளுநர்கள் உட்பட மேலும் பல பணிகளுக்காக இந்த வேலைவாய்ப்புகள் திறக்கப்படுகின்றன.

இந்த பணிகளுக்குச் சம்பந்தப்பட்ட பணி அனுபவம் இருப்பது அவசியமாகும். மேலும், இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக முன்னர் ஏதேனும் இரண்டு துறைகளின் கீழ் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பணியகத்தின் http://www.slbfe.lkஎன்ற இணையத்தளத்திலும் உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அடுத்த 36 மணித்தியாலங்களில் டியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

ஆவணி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்து தொடர்: அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் கடும் கண்டனம்!

ஆனி 30, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி . சௌத்ரி சாலை விபத்தில் காலமானார்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மாயம்

ஆவணி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube