Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணை ஆரம்பமானது.

இந்த மனுக்கள், ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் உள்ள சில ஏற்பாடுகள், அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் இறையாண்மை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இந்தச் சட்டமூலத்தின் மூலம் தகவல் அறியும் உரிமையும் பாதிக்கப்படக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமெனில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டதுடன், மக்கள் வாக்கெடுப்பிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

ஆவணி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோப் குழு முன்னிலையில் ஆஜராக திறைசேரி செயலாளர் மறுப்பு

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி முறைகேடு விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்

புரட்டாதி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துப்பாக்கி இயங்காததால் துப்பச்சூட்டு முயற்சி தோல்வி

புரட்டாதி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube