Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி கையிருப்பு குறைந்ததையடுத்து, மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு குறைந்ததையடுத்து, மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது போதுமான அளவு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவதால், மின் விநியோகத்திற்கு எந்தவித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

மின்னுற்பத்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் கையிருப்பில் உள்ள நிலக்கரியின் அளவு குறைவடைந்துள்ளது. நிலக்கரி கப்பல் எதிர்வரும்12 ஆம் திகதி நாட்டை வந்தடையும். அக்கப்பல்களில் இருந்து நிலக்கரியை இறக்கிய பின்னர் வழமை போல் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என்பதால், மின்தடை ஏற்படுமோ என தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு குறைந்ததையடுத்து, மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில் போதுமான அளவு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவதால் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித தீர்மானமும் அரசாங்கம் எடுக்கவில்லை. தற்போதைய வறட்சியான காலநிலையால் பிரதான நீர் நிலைகளின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து செல்கிறது. ஆகவே குடிநீர், மின்னுற்பத்தி, விவசாயம் ஆகிய சகல தேவைகளுக்கும் நீரை விநியோகிக்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.

நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் நிலக்கரி ஊடாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய நேரிடும். ஆகவே தற்போதைய நிலைமை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். நீரையும், மின்சாரத்தையும் இயலுமான வகையில் சிக்கனமாக பாவிக்க வேண்டும் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முதல் BESS உபகரணம் கிளிநொச்சி வந்தது!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல், சாவகச்சேரி உப தவிசாளர் நீக்கத்துக்கு கண்டனம்

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube