Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலைநாட்டில் பூத்துக்குலுங்கும் கஹகோனா மலர்கள்

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் நிலவிய சீரற்ற வானிலை நீங்கியுள்ள நிலையில், தற்போது ‘கஹகோனா’ (Kahakona) மலர்கள் பூத்து குலுங்கி மலைநாட்டுப் பகுதிக்கு மேலும் அழகுசேர்த்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் தேயிலைத் தோட்டங்கள், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளின் இருமருங்கிலும், ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியிலும் உள்ள கஹகோனா மரங்களில் பெருமளவில் மலர்கள் பூத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், தேயிலைச் செடிகளுக்கு நிழல் தருவதற்கும் மண் அரிப்பைத் தடுப்பதற்குமாக கஹகோனா மற்றும் ‘மேய்மாரா’ (May Mara) போன்ற மரங்கள் நடப்பட்டதாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த கஹகோனா மரங்களில் இந்த முறை அதிகளவில் மலர்கள் பூத்துள்ளன.

அந்த மலர்களின் நறுமணம் மற்றும் மகரந்தச் சேர்க்கைக்காக ஏராளமான வண்டுகளும் தேனீக்களும் அவற்றை நோக்கி வருவதாக தோட்ட அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மலைநாட்டின் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் வீதிகளின் இருமருங்கிலும் பூத்துக் குலுங்கும் கஹகோனா மலர்கள், இந்த நாட்களில் அந்த பகுதிக்கு பேரழகையும் மனஅமைதியையும் சேர்க்கும் எழில்மிகு காட்சியாக மாறியுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

வைகாசி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வாகன நெரிசல், வாகன தரிப்பிடங்களை எளிதாக கண்டறிய உதவும் டிக்டொக் நேரலை

ஆடி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

புத்தளம்- மாதம்பையில் டிராக்டர் விபத்து: இளைஞர் பலி!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube