Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம்!

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று (08) அறிவித்துள்ளார்.

இதற்கமைய, அரசியலமைப்பின் 121(1) பிரிவின் படி உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எனவே, இதனை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84(2) பிரிவின் கீழ் விசேட பெரும்பான்மை வாக்குகள் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளவாறு அந்தப் பிரிவுகள் நீக்கப்பட்டால் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, உயர்நீதிமன்றத்தின் முழுமையான தீர்மானத்தை இன்றைய நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அறிக்கையில் (ஹன்சார்ட்) அச்சிடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதாள உலகக் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நண்பர்களுடன் கல்பொத்தஹேன குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊஞ்சல் தடி முறிந்து விழுந்தில் தாயுடனிருந்த 5 மாதக் குழந்தை பலி!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்காக 1,700 சிசு செரிய பேருந்துகள் சேவையில்!

ஆவணி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube