பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் (20 ஓவர்) அரையிறுதியில் பங்காளதேஷ் அணியை வீழ்த்திய இந்திய அணி, 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
10வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டுபாயில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில்
மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணியை இந்தியா, எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் 4,758 ஓட்டங்களுடன் தன்வசம் வைத்துள்ளார்.
தற்போது 4,692 ஓட்டங்களுடன் 2வது இடத்தில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, இந்த சாதனையை முறியடிக்க இன்னும் 67 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.
இறுதிப்போட்டியில் 67 ஓட்டங்கள் எடுத்தால், சூசி பேட்ஸை பின்னுக்குத் தள்ளி சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை மந்தனா படைப்பார்.
