Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமலுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

புரட்டாதி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் சுமார் 20 இலட்சம் அமெரிக்க டொலரை நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரைச் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினமே அவரது பிணை கோரிக்கை தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் நாமல் ராஜபக்‌ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் முன்வைத்த சமர்ப்பணங்களைக் பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தின் மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தின் பின்னணியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

சிறுவன் கார் தீவைத்ததாக பரவும் காணொளி: பொலிஸ் விளக்கம்!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நக்கிள்ஸ் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை

ஆடி 25, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு – அம்பலாந்தோட்டையில் பரபரப்பு!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube