Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் விசேட பயிற்சி பெற்ற 20 இலங்கை பாற்பண்ணையாளர்கள்

#இலங்கை #பாற்பண்ணையாளர்கள் #இந்தியா #விசேடபயிற்சி #பால்பண்ணை #Livestock #DairyFarming #SriLanka #India #Training #DairyFarmers

புரட்டாதி 17, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இலங்கையைச் சேர்ந்த 20 பாற்பண்ணையாளர்கள் அடங்கிய குழுவினர், விசேட பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி திட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாற்பண்ணையாளர்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அறிவித்த திட்டத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் 700 இலங்கையர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்த பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய பால்வள அபிவிருத்தி சபையில் (NDDB) இந்த ஒரு வாரகால பயிற்சி நடைபெற்றது.

பாற்பண்ணைத் துறையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக பயிற்சி அமைந்திருந்ததுடன், விலங்கு இனப்பெருக்கத்தில் நவீன தொழில்நுட்பங்கள், தர உத்தரவாதம், கால்நடைகளுக்கான உணவூட்டல், சமச்சீர் போஷணையின் முக்கியத்துவம், அதிக உற்பத்திக்கான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் துறைசார் திறன் மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பயிற்சி வழங்கப்பட்டது.

இதனிடையே, நடைமுறை அனுபவத்தைப் பெறும் வகையில் குழுவினர் மொத்த பால் குளிரூட்டும் அலகு, அமுல் TMR தொழிற்சாலை, கைரா பால் சங்கம் மற்றும் NDDB-யின் தயாரிப்பு மற்றும் செயல்முறை மேம்பாட்டு ஆய்வகம் உள்ளிட்ட இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டனர்.

இதன் மூலம் நவீன பால்வளக் கட்டமைப்பு, உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் பால் விநியோகச் சங்கிலி தொடர்பான நடைமுறை அறிவை பங்கேற்பாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

மேலும், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதுடன், பாற்பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் மற்றும் நிலையான பால்வளக் கட்டமைப்புகளை உருவாக்குதல் தொடர்பிலும் இந்த திட்டம் கவனம் செலுத்தியுள்ளது.

தூய்மையான பால் உற்பத்தி, சுகாதாரமான கையாளல் நடைமுறைகள், சிறந்த பண்ணை முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நிலையான பாற்பண்ணை முறைகள் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சித் திட்டம், இந்தியா – இலங்கை இடையிலான பால்வளத் துறை அறிவுப் பரிமாற்றம் மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உணவு வழங்க கடற்படையின் 4 நடமாடும் சமையலறைகள் தயார்!

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி உட்பட நால்வர் கைது!

புரட்டாதி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube