லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன், 04 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளது.
ஆண் தொழிலாளர் குழுவினர் கொழுந்து பறித்து கொண்டிருக்கும் போது குளவிகள் கலைந்துவந்து கொட்டியமையினால் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவரே குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மேலும் குளவிக் கொட்டுக்கு இலக்கான 04 தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை மலையின் மரமொன்றிலிருந்த குளவிக்கூடு உடைந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்த குளவிகள் கலைந்துவந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
