Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வைத்தியர் சுகுணன், எம்.பி அர்ச்சுனா , முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிழல் நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்–

புரட்டாதி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கிஜா பிரச்சனை தொடர்பாக பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் யூடியூப், முகநூல் தளங்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையை பெறுவதா இல்லையா என தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதிக்கு நீதவான் வழக்கை திகதியிட்டார்.

கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளர் நியமிக்கப்பட்டவர்கள் ஹிஜாப் உடை அணிவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இதன் போது வைத்திய பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணனுக்கு எதிராக முகநூல் ஊடாக தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் தொடர்பாக பதிவிடப்பட்டது

இது தொடர்பாக வைத்தியர் கு.சுகுணன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹீம், மற்றும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை (21) வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணத்துரை தரஷ்சினி திறந்த நீதிமன்றில் விசாரணைணக்காக எடுத்து கொண்டபோது வழக்காளி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், மற்றும் கனகலிங்கோம் கிசோபனா முன்னிலையாகி சமர்பணத்தை முன்வைத்தனர். இதன்போது குறித்த வழக்கை நிபந்தனைக்கு உட்டபட்ட கட்டளையை பெறுவதா இல்லையா தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதிக்கு நீதவான் வழக்கை திகதியிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

2030 இல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சிறை செல்லுவார்

புரட்டாதி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுர அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும் : ஈரோஸ் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன்

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2.5 மில்லியன் மோசடி தொடர்பில் திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும அரசாங்க நிதி குழுவில் முன்னிலை!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube