இதுதொடர்பில், இலங்கையின் முன்னணி இந்து அமைப்புகளின் குருமார்கள் மற்றும் பிரதிநிதிகள் இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு சென்று, அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தினர்.நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நிந்தனை செய்த வழக்கில் சவூதி அரேபிய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி, ஜம்இய்யா சார்பில் சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்குமாறு இந்த சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், அனோஜனின் செயலுக்காக தங்களது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்த இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், அவரது அறியாமையால் ஏற்பட்ட தவறை கருத்திற்கொண்டு தண்டனையை குறைக்க அல்லது விடுதலை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரினர்.
இதுதொடர்பான மகஜர் ஒன்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், நாட்டில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த அனைத்து சமய அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
