ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி சீனாவிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததையடுத்து, இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஒரு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஆறு வெண்கலம் என மொத்தம் 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஹரிஹரனுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹரிஹரனின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 30 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘ELITE Sportsperson Scheme’ திட்டத்தின் கீழ் ஹரிஹரன் நிதியுதவி பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
