பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எயார்பஸ் (Airbus) ஒப்பந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று (29) காலை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருடைய விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
