சூரை மீன்கள் (Tuna), இறால்கள் மற்றும் நண்டுகள் உள்ளிட்ட உயர்தர கடல்சார் உற்பத்திகளை ரஷ்ய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை விரிவுபடுத்த இலங்கை எதிர்பார்ப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஸகாரியான் (Levan S. Dzhagaryan) நேற்று (29) மீன்பிடித்துறை அமைச்சில் அமைச்சரைச் சந்தித்த போதே இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்தச் சந்திப்பின் போது மீன்பிடி, கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் கடல் உணவு உற்பத்திகளுக்கு ரஷ்ய சந்தையில் அதிக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
