செப்டம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 971 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 557 பேர் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 16 லட்சத்து 93 ஆயிரத்து 679 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
