நாட்டின் கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பானது 03 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 04 ஆம் திகதி இரவு 10 மணி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்ப்பறை மற்றும் மினிப்பே, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்டை, மாத்தளை மாவட்டத்தின் அம்பாங்கங்க கோரளை மற்றும் மாத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ‘எச்சரிக்கை நிலை 2’ இன் கீழ் செம்மஞ்சள் நிற விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கேகாலை மாவட்டத்தின் இரம்புக்கனை, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ‘எச்சரிக்கை நிலை 1’ இன் கீழ் மஞ்சள் நிற அவதானிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
