இந்தியத் திரைப்பட நடிகை நமீதா, யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்திற்கு வருகை தந்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவர் ஜெ. விவேகானந்தன், இந்தியத் திரைப்பட நடிகை நமீதா, இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான வீரேந்திர சவுத்திரி மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது, வடக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், வீரேந்திர சவுத்திரி – நமீதா குழுவினரால் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
