நாட்டில் பல பகுதிகளில் இன்று (05) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும், மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதேவேளை மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
