நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடரும் நிலையில், பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (05) இரவு 11.00 மணி முதல், நாளை (06) நண்பகல் 01.00 மணி வரையிலான 14 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடமேல், மத்திய, சபரகமுவ, ஊவா, மேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
