திஸ்ஸமஹாராம நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த 54 வயதுடைய நபர் ஒருவர் முதலையிடம் சிக்கிய நிலையில், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (06) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
அக்குறுகொட பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முதலை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு, முதலையிடம் சிக்கியிருந்த நபரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
பின்னர், காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
