Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த 7 நாடுகள் போட்டி – இந்தியாவும் களத்தில்

அக்டோபர் 7, 2026
படிக்க 2 நிமிடங்கள்

2036ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் இந்தியா, கட்டார் உள்ளிட்ட ஏழு நாடுகள் தற்போது இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் கட்டாருடன் ஜெர்மனி, ஹங்கேரி, துருக்கி, தென்னாபிரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் குழுவுடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நாடுகள் தங்களது போட்டித் திட்டங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் எதிர்கால போட்டி நடத்துநர் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளன.

தொடர்ந்து, 2027 மார்ச் மாதத்தில் தகுதியான போட்டியாளர்களின் ஆரம்பப் பட்டியலை சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிர்வாகக் குழு தயாரிக்கவுள்ளது. 2028ஆம் ஆண்டில் முன்னுரிமை பெறும் நாடுகள் அடையாளம் காணப்பட்டு, 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு 2029ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தெரிவு செய்யப்படவுள்ளது.

இந்தியா முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் திட்டம் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரை மையமாகக் கொண்டுள்ளது. அஹமதாபாத் 2030ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ளதுடன், ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் திட்டத்தில் முக்கிய நகரமாகவும் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, கட்டார் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் பிராந்திய நாடாக மாறும் இலக்குடன் போட்டியிடுகிறது. எனினும், அந்நாட்டின் கடுமையான கோடைக்கால வெப்பநிலை காரணமாக பாரம்பரியமான ஜூலை–ஆகஸ்ட் காலப்பகுதிக்கு பதிலாக வேறு காலப்பகுதியில் போட்டிகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதன் மூலம் ஆபிரிக்க கண்டத்தில் முதலாவது ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடாக மாறும் வாய்ப்பு காணப்படுகிறது. அந்நாடு ஏற்கனவே 2010ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ணம் மற்றும் 1995ஆம் ஆண்டு ரக்பி உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்தியுள்ளது.

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பமுள்ள ஏனைய நாடுகள் தங்களது ஆர்வத்தைத் தெரிவிக்க எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக 2028ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரிலும், 2032ஆம் ஆண்டு போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெறவுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

தோனி மைதானத்திற்குள் வரும்போது ஏற்படும் ஆரவாரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது – எரிக் சைமன்ஸ்

அக்டோபர் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

LPL தொடரில் இருந்து விலகும் பெத்தும் நிஸ்ஸங்க!

ஜூன் 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

தனது காதலியை மணந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ

ஆகஸ்ட் 12, 2026
இலங்கைவிளையாட்டு

கண்டி அணியை வீழ்த்தி தம்புள்ள சிக்ஸர்ஸ் வெற்றி!

ஜூலை 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube