Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இலங்கையின் பல பகுதிகளில் மழை – சில பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை

அக்டோபர் 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

இன்று இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில்  (08) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய நகரங்களுக்கான வெப்பநிலை

நாளை கொழும்பில் அதிகபட்ச வெப்பநிலை 32°C ஆகவும், யாழ்ப்பாணத்தில் 33°C ஆகவும், அனுராதபுரத்தில் 34°C ஆகவும், மட்டக்களப்பில் 32°C ஆகவும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரத்தினபுரியில் அதிகபட்சமாக 35°C வெப்பநிலை பதிவாகக்கூடும். கண்டியில் 32°C ஆகவும், நுவரெலியாவில் 21°C ஆகவும் வெப்பநிலை காணப்படும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. பல நகரங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது.

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை

இதனிடையே, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நாளை பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்தை அடையக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், கடுமையான வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்து நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கும் எச்சரிக்கை

மன்னார் முதல் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் எனவும், அந்தச் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையான தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால் குறித்த கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் நாளைய பயணங்கள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பிரதேசத்திற்குரிய காலநிலை நிலவரங்களை அவதானித்து செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம்: யுனிசெப் உடன் இணையும் ஐசிசி!

ஜூன் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 20 வருடமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் மீனவ கிராமத்து மக்கள் – ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

ஜூலை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 62வது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

மே 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த சாசன சீரழிவைத் தடுக்க தேவாலயங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் அவசியம்!

ஜூன் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube