நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலின் அடிப்படையில், நாட்டின் 22 மாவட்டங்களுக்கு சிவப்புக் எச்சரிக்கையும், 03 மாவட்டங்களுக்கு அம்பர் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (09) வெள்ளிக்கிழமை அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த சுழல் காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.