இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 1,988 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.
இந்த விபத்துகளில் மொத்தம் 2,095 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், வாகன சாரதிகள் மட்டுமன்றி பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து வீதிப் பயனாளர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதிக வேகம், கவனக்குறைவான வாகன ஓட்டம், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற காரணிகள் வீதி விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன.
மேலும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்குமாறும், வாகனங்களை செலுத்தும்போது அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
