பாகிஸ்தான் அணி ராவல்பிண்டியில் நடைபெற்ற இரண்டாவது T20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணியை 82 ஓட்டங்களால் வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2–0 எனக் கைப்பற்றியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது. மாஸ் சாதகத் 96 ஓட்டங்களையும், சாஹிப்சாதா ஃபர்ஹான் 73 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பாகிஸ்தான் அணியின் மொஹம்மட் இம்ரான் ரந்தாவா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
இதன் மூலம் ஒரு போட்டி மீதமிருக்க பாகிஸ்தான் T20 தொடரைத் தன்வசப்படுத்தியது
